அசாமில் பன்றிப் பண்ணை தொடங்கிய குடும்பத்தை ஒதுக்கி வைத்த மத அமைப்பு

கவுகாத்தி:

பன்றிப் பண்ணை தொடங்கியதால், குடும்பத்தையே வெளியேற்றியிருக்கிறது மத அமைப்பு.


அசாமை சேர்ந்த பலேந்திர நாத் என்பவரின் மகன் வேலை கிடைக்காததால், பன்றி பண்ணை தொடங்கினார்.

இது குறித்த தகவல் அறிந்த 30 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட மத அமைப்பு ஒன்று,பலேந்திர நாத் குடும்பத்தாரை ஒதுக்கி வைத்தது.

இதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தன் உறுப்பினர்கள் பன்றிக் கறி உண்ண அனுமதிக்கும் இந்த மத அமைப்பு, பன்றி வளர்ப்பவரை தண்டிப்பது ஏன் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து விளக்கம் அளித்த மத அமைப்பு, எந்த தொழில் தொடங்கினாலும் நாங்கள் எதிர்ப்பதில்லை.
எங்கள் அமைப்பின் உள்ளூர் பிரிவு இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.