சென்னை,

ட்டப்பேரவை தொடர்பான வழக்குகள் அனைத்தும் வரும் 16ந்தேதி முதல் விசாரணை தொடங்கும் என சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கூறி உள்ளார்.

அரசுக்கு எதிராக செயல்படுவதாக டிடிவி ஆதரவு 18 எம்எல்ஏக்கர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதுபோல தடை செய்யப்பட்ட குட்கா விவகாரத்திலும் திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிமைக்குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.

மேலும் சட்டப்பேரவை பெரும்பான்மையின்போது அரசுக்கு எதிராக வாக்களித்ததாக ஓபிஎஸ்-ஐ பதவி நீக்க வேண்டும் என்று திமுக சார்பாக தொடரப்பட்ட வழக்கு உள்பட 8 வழக்குகளை ஐகோர்ட்டு அமர்வுக்கு மாற்றுவதாக தனி நீதிபதி கடந்த விசாரணையின்போது அறிவித்தார்.

இதுபோன்ற வழக்குகளில், கவர்னர் மற்றும் சபாநாயகர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளதால் சட்டச்சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வழக்குகள் அனைத்தும்  தலைமை நீதிபதி தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்த்த நிலையில்,  சட்டப்பேரவை தொடர்பான அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என்றும் குட்கா வழக்கு உள்பட 8 வழக்குகளின் விசாரணை வரும் 16ம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.