சட்டமன்ற இடைத்தேர்தல்: விளாத்திக்குளத்தில் அதிமுக வெற்றி

சென்னை:

ன்று வாக்குகள் எண்ணப்படும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளில் திமுக 13 இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில், அதிமுக 9 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில்  விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிமுக  வேட்பாளராக களமிறக்கப்பட்ட   சின்னப்பன் 7லட்சத்து இரண்டு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து வந்த திமுக வேட்பாளரை விட  28ஆயிரத்து 960 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றுள்ளார்.

அதிமுக வேட்பாளர் சின்னப்பன் – 70002 வாக்குகள்

திமுக வேட்பாளர் ஜெயக்குமார் – 41042 வாக்குகள்

அமமுக – ஜோதிமணி – 9619 வாக்குகள்

நாம் தமிழர் – மு.காளிதாஸ் – 4591 வாக்ககள்

மக்கள் நீதி மய்யம் – நட்ராஜ் – 1383வாக்குகள்  பெற்றுள்ளனர்.

விளாத்திக்குளம் தொகுதியில் கடந்த தேர்தலின்போது  சட்டமன்ற  உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் உமா மகேஸ்வரி ஆவார். கடந்த முறை தேர்தலில் இவர் 18718 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பீமராஜவை தோற்கடித்தார்.

அதிமுகவுக்கு எதிராக டிடிவி அணியில் சேர்ந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அமமுக சார்பில்  களம் இறங்கியுள்ளார். அவருக்கு வெறும் 9619 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

கார்ட்டூன் கேலரி