டெல்லி:

பஞ்சாப்,கோவா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கோவா சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. கோவாவில் மொத்தமுள்ள, 40 தொகுதிகளில் 250 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். கோவா மாநிலத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 83 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப்பில் 117 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இங்கு பதிவான ஓட்டுக்கள் மார்ச் 11ம் தேதி எண்ணப்படுகின்றன. 1,145 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். பஞ்சாப் தேர்தலில் 70 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப், கோவா மாநிலங்களில் நடந்த தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அடுத்து உத்தரகாண்ட், உ.பி, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.