தஞ்சை, அரவக்குறிச்சி, தி. குன்றம் தொகுதிகளுக்கு அக்டோபரில் தேர்தல்?

சென்னை :

ஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று  தொகுதிகளிலும் சட்டசபையில் பிரதிநிதித்துவம் இல்லாமல் காலியாக உள்ளன.  இந்த மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் கமிஷன் நடத்தை விதிப்படி  6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

a

 

ஆகவே, இந்த மூன்று  தொகுதிகளிலும் வரும் நவம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.  ஆகவே,  தேர்தல் ஆணைய அதிகாரிகள், இந்தத் தொகுதிகளில் தேர்தல் நடத்துவது  குறித்து  ஆய்வு செய்து வருகிறார்கள்.

அக்டோபர் மாதம் இரண்டாவது  வாரம் தேர்தலை நடத்தலாமா என்று ஆலோசனை நடக்கிறது. .தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அக்டோபர் மாத இறுதியில் முடிகிறது. எனவே உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் மூன்றாவது வார இறுதியில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதோடு சேர்த்து இந்த மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் வரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Aravakurichi, Assembly election, tamilnadu, Thanjavur, அரவக்குறிச்சி, சட்டமன்ற தேர்தல், தஞ்சை, தமிழ் நாடு, திருப்பரங்குன்றம்
-=-