விரைவில் சட்டமன்ற தேர்தல்: மத்தியப் பிரதேசத்தில் ராகுல் காந்தி மீண்டும் சுற்றுப்பயணம்

போபால்:

த்திய பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி 3வது முறையாக இன்று மீண்டும்  சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இது காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது பாரதியஜனதா கட்சி ஆட்சி செய்து வரும் மத்திய பிரதேச மாநிலத்தில்  2003ஆம் ஆண்டு முதல் மாநிலமுதல்வரா சிவராஜ் சிங் சவுகான் இருந்து வருகிறார். அங்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

அங்கு ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதே வேளையில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாரதிய ஜனதாவும் இப்போதே களமிறங்கி வேலை செய்து வருகிறது.

ஏற்கனவே  மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி,  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தனது தேர்தல் பிரசாரத்தை செப்டம்பரில் தொடங்கினார். அதைத்தொடர்ந்து மேலும் ஒருமுறை மத்தியபிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மாநில மக்களிடையே கலந்துரையாடி வரும் ராகுல் காந்தி இன்று 3வது முறையாக மீண்டும் ம.பி. செல்கிறார்.

இன்று காலை குவாலியருக்கு சிறப்பு விமானம் மூலம் செல்லும் ராகுல், அங்கிருந்து  ஹெலிகாப்டர் மூலம் மொரீனாவுக்குச் சென்று அங்குள்ள அம்பேத்கர் மைதானத்தில் ஆதிவாசி எக்தா பரிஷத் சார்பில் நடைபெறும் பழங்குடியினர் மற்றும் விவசாயிகள் உரிமைக்கான மாநாட்டில் பங்கேற்கிறார்.

அதைத்தொடர்ந்து சாலை மார்க்கமாக செல்லும் ராகுல்காந்தி,  ஜபல்பூர் செல்லும் ராகுல் காந்தி நர்மதா நதியில் நடைபெறும் பிரமாண்ட  பூஜையில் கலந்துகொள்கிறார்.

ராகுல்காந்தியின் சுற்றுப்பயணம்,  மக்களுடனான நெருக்கம் மாநில பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.