சட்டமன்ற தேர்தல்: கடைசி பந்தில்தான் முடிவு தெரியுமா?

--

a

 

மிழக சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. சிறிது நேரத்துக்கு முன்பு வரை, அ.தி.மு.க.வே அதிகப்படியான இடங்களில் முன்னிலை பெற்று வந்தது.

அதே நேரம் மதியம் 2.30 மணி நிலவரப்படி, நிலவரம் மாறி, பலவித எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுவரை அதிமுக 12 இடங்களிலும், திமுக 11 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

முன்னணி நிலவரம் என்று எடுத்துக்கொண்டால் அ.தி.மு.க.  126 இடங்களிலும் தி.மு.க.  94 இடங்களிலும் இருக்கின்றன. (காங்கிரஸ் 9, ஐ.யூ. எம். எல். 1, புதிய தமிழகம் 1, பா.ம.க. 1)

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், ஐ.யூ.எம்.எல்., புதிய தமிழகம் ஆகியவை சேர்த்து மொத்தம் 11 தொகுதிகளில் முன்னணியில் இருக்கின்றன. ஆக திமுக கூட்டணி 105 தொகுதிகளில் முன்னணியில் இருக்கிறது.

தவிர அ.தி.மு.க. முன்னணியில் இருக்கும் 126 தொகுதிகளில் பலவற்றில் ஓட்டு வித்தியாசம் மிகக் குறைவாகவே இருக்கிறது.

உதாரணமாக சில தொகுதிகள்..

கள்ளக்குறிச்சி: 361

சிதம்பரம்: 1791

அறந்தாங்கி: 768

அரியலூர் : 1270

பர்கூர்: 2286

இது போல பல தொகுதிகளில் மிகக் குறைந்த வித்தியாசத்திலேயே அ.தி.மு.க. முன்னிலை பெற்றிருக்கிறது. இந்தத் தொகுதிகளின் நிலவரம் அடுத்தடுத்த சுற்றுகளில் எப்படியும் மாறலாம். ஆகவே அத் தொகுதிகளை இழந்தால், ஏற்கெனவே நினைத்தது போல் அல்லாமல் அ.தி.மு.க. முழு மெஜாரிட்டி பெறுமா என்பது கேள்விக்குறியாகிவிடும்.

இது போன்ற சூழல் ஏற்பட்டால் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளின் தேர்தலே மெஜாரிட்டியை உறுதி செய்யும் தேர்தலாக அமையும்…

அதாவது கிரிக்கெட்டில் கடைசி பந்தில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுவதுபோல..!