?-

சென்னை,

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் ஜெயலலிதா வுக்கு ரூ.100 கோடி அபராதமும், 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. அதேபோல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைதண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த நிலையில் சசிகலா உள்ளிட்ட 3 பேர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதால் அவரது அபராதத் தொகையை வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் அபராதத் தொகையை வசூலிக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு சொந்தமான தமிழகத்தில் உள்ள 68 சொத்துகள் அடையாளம் காணப்பட்டு உள்ளது.

இந்த சொத்துக்களை பறிமுதல் செய்து விற்பனை செய்ய தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் தமிழகத்தை சேர்ந்த 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்படும் சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டு, அவர்களது அபராத தொகை செலுத்தப்படும் என தெரிகறிது. ஆனால், இந்த சொத்துக்கள் விற்கப்பட்டாலும் அபராத தொகைக்கு போதுமானதாக இருக்காது என்பதால், அவர்களின் வங்கி கணக்குகளை முடக்கி அதிலுள்ள பணத்தை பறிமுதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.