நெட்டிசன்:
முதல்வர் ஜெயலலிதா, உடல் நலம் குன்றியதைல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது அவர் உடல் நலம் தேறிவிட்டதாகவும், ஆனால் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவமனை தரப்பு தெரிவித்து வருகிறது.
download
இதற்கிடையே மேல் சிகிச்சைக்காக ஜெயலிலதா சிங்கப்பூர் செல்கிறார் என்று ஒரு வதந்தி பரவியது. அதை மருத்துமனை நிர்வாகம் மறுத்தது. அதோடு, ஜெயலலிதாவின் ஒட்டுமொத்த உடல் நலன் குறித்தும் பதைபதைக்க வைக்கும் வதந்தி பரவியது.  இப்படி வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயலலிதா பொறுப்பு வகிக்கும் காவல்துறை எச்சரித்தது.
 
ஒட்டு மொத்த மாநில மக்களுக்கும் அரசு ரீதியான தலைவராக இருக்கும் ஜெயலிலதாவின் உடல் நலன் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படையாக அறிவித்தால் எந்தவித வதந்தியும் பரவாது. அல்லது ஒரு நிமிடம் அவர் வீடியோவில் பேசலாம். அல்லது, அரசு நிர்வாகம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிப்பதாக செய்தி வருகிறதே.. அதை புகைப்படமாக வெளியிடலாம்.
எளிதாகச் செய்யக்கூடிய இதையெல்லாம் செய்யாததாதல்தான் வதந்தி பரவுகிறது.
இந்த நிலையில், “ஜெயலலிதாவுக்கு வந்திருப்பது சொத்துக்குவிப்பு ஜூரம்..” என்று சமூகவலைதளங்களில் பலரும் எழுதி வருகிறார்கள்.
அதாவது, ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை விரைவில் உச்ச நீதிமன்றம் அறிவிக்க இருக்கிறது. அதையடுத்தே இந்த “ஜூர நாடகம்” என்கிறார்கள் இவர்கள்.
அவர்களில் இருவரின் முகலூல் பதிவுகள்:
Saravanan Savadamuthu:
தந்திகளை நம்பி யாரும் ஏமாந்திறாதீங்க..
சொத்துக் குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அடுத்த மாதம் 7-ம் தேதிக்குள்ளாக வந்துவிடும் என்பது உறுதி. அடுத்த திங்கள்கிழமையே தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீர்ப்பு வரும்வரையில் நம்ம ஆத்தா சத்தியமா ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வராது.
தீர்ப்பு எப்படி என்பதை பொறுத்துதான் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் இருப்பாரா அல்லது வீடு திரும்புவாரா என்பது தெரியும்..!
அதுவரைக்கும் நம்ம ஆத்தா, மெடிக்கல் லீவுல இருக்காங்கன்னு நினைச்சுக்குங்க மக்களே..!
ஒரு அரசு ஊழியர் மெடிக்கல் லீவுகூட எடுக்கக் கூடாதுன்னா எப்படி..?
Venkatesan Kanakaraj
முதல்வர் நலமாக இருக்கிறார். மருத்துவ காரணங்கள் மட்டுமில்லை. அரசியல் காரணங்களுக்காகவுமே அவரை பற்றிய வதந்திகள் அவரை சுற்றியுள்ள கூட்டம் மூலமாகவே கசிய விடப்படுகிறது. இது போகப்போக புரியும். திட்டமிட்ட தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும். சொத்து குவிப்பு தீர்ப்பு நான்கு வாரத்துக்குள் வெளியாகும் என தகவல் கசிந்த்து. அப்படி ஒருவேளை தீர்ப்பு வெளியாகி, அது சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ வந்தால் கட்சிக்கும், தனக்கும் சிக்கல்.
மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை எடுப்பது மூலம் தீர்ப்பு வழங்குவது கூட தள்ளிவைக்கலாம். அப்படியே அதற்கு தேதி அறிவித்தால் சட்ட ரீதியாக ஒத்திவைக்க அவகாசம் கோரலாம் எனவும் தகவல்.