சென்னை: பீர்ங்கரணை காவல்நிலைய உதவி ஆய்வாளர்,  கீழ்பாக்கத்தில் உள்ள காவலர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் நரசிம்ம மூர்த்தி (56).  இவர் மதுவுக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. மேலும் சிறுநீரக கோளாறும் இருந்துள்ளது. இதற்காக அறுவை சிகிச்சை செய்துவிட்டு, சொந்த வீடு உள்ள அயப்பாக்கத்தில்  ஒய்வெடுத்து வந்துள்ளார். இதனால், அவர் மது அருந்தக்கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்த நிலையில் நரசிம்ம மூர்த்தி மீண்டும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால்  குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபிக்கொண்டு, அயப்பாக்கத்தில் இருந்து ஆட்டோ மூலம் கீழ்ப்பாக்கம் குடியிருப்புக்கு வந்த நரசிம்ம மூர்த்தி, தனது மனைவியிடம்  தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்து விட்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அவரது வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அவர் உயிர் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து,   உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.