அட்ஜெஸ்ட் செய்ய சொன்ன இயக்குனரை , அம்பலமாக்கிய சஜிதா மாடத்தில்…!

 

மீ டூ புகாரை விசாரிப்பதற்காக தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நாசர் தலைவராக இருக்கும் இக்குழுவில் பெண் வழக்கறிஞர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 20 வருடங்களாக மலையாள சினிமாவில் முக்கியமான குணச்சித்திர நடிகையாக பயணித்து வரும் சஜிதா மாடத்திலை உதவி இயக்குனர் ஒருவர் அட்ஜெட்ஸ் செய்ய சொல்லி கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திக் என்ற உதவி இயக்குனர், தான் இயக்க உள்ள படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சஜிதாவை தொலைபேசி மூலமாக அணுகியுள்ளார்.

அந்த உதவி இயக்குனர் “நீங்கள் கொஞ்சம் அனுசரித்துப் போக வேண்டியிருக்கும், உங்களால் முடியுமா?” என்று கேட்டுள்ளார். இதனை நடிகை சஜிதா, தனது முகநூல் பக்கத்தில் அந்த நபரின் தொலைபேசி எண்ணை போட்டு, இந்த நபரை அனுசரித்து நடிக்க விருப்பம் உள்ள பெண்கள், இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என பதிவுட்டு, அவரை அம்பலப்படுத்தியுள்ளார்.