கோயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : உதவி பூசாரி கைது

.

சென்னை

சென்னை சூளைமேட்டில் ஒரு கோவிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பூசாரியின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சூளை மேடு பகுதியில் உள்ளது கன்னிகா பரமேஸ்வரி கோவில்.   அங்கு ஒரு மூதாட்டி தனது மூன்றரை வயது பேத்தியுடன் வந்துள்ளார்.   கோயிலின் உள்ளே பாட்டி பிரார்த்தனை செய்துக் கொண்டிருக்கும் போது அந்த சிறுமி சன்னதிக்கு வெளியே விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.   அந்தக் கோவிலின்  பூசாரி ரமேஷ் என்வருக்கு உதயகுமார் (வயது 20) என்பவர் உதவியாளராக இருந்து வந்துள்ளார்.

விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமிக்கு உதயகுமார் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.   அந்த சிறுமி தனது பாட்டியிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.   அந்தப் பாட்டி உதயகுமாரை கண்டித்துள்ளார்.   அப்போது உடன் இருந்தவர்கள் உதயகுமாரை அடித்து உதைத்து  சூளைமேடு காவல்துறையினரிடம் ஒப்புவித்துள்ளனர்.

சிறுமியின் தந்தை அளித்த புகாரை ஒட்டி உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   பலரும் வரும் கோவிலில் இது போன்ற சம்பவம் நடந்ததில் பக்தர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.