பாகுபலி 2-வை பின்னுக்குத் தள்ளிய மாஸ்டர்…!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது.

கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியான முதல் பெரிய படம் என்பதால் ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. திரையரங்கில் வெளியாகிய 16 நாட்களில் ஓடிடி-யில் வெளியிடப்பட்டாலும், தியேட்டர்களில் கூட்டம் குறையாமல் இருந்தது. உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்ற மாஸ்டர் வசூலிலும் முன்னணி இடத்தைப் பெற்றது.

இந்நிலையில் ராஜமெளலி இயக்கிய பாகுபலி 2 படத்தை பின்னுக்குத் தள்ளி விஜய்யின் மாஸ்டர் புதிய சாதனை படைத்துள்ளது.

பாகுபலி 2 படம் தமிழகத்தில் அதிக வசூல் சாதனை புரிந்த படமாக இதுவரை இருந்தது. தற்போது அந்தச் சாதனையை ‘மாஸ்டர்’ படம் முறியடித்துள்ளதாம்.