நாசா விஞ்ஞானிகள் கருத்துப்படி, புதன்கிழமையன்று 400 மீட்டர் நீளமுள்ள ஒரு உடுக்கோள், 1.8 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கு அருகே கடந்து சென்றது.

வழக்கமாகச் சிறிய நட்சத்திரங்கள் பூமிக்கு நெருக்கமாகச் செல்கின்றன, ஆனால் 2014 ஆம் ஆண்டு மே மாதம் கண்டறியப்பட்ட 2014 J025 என்ற உடுக்கோள் தான் 2004 ஆம் ஆண்டிற்குப் பிறகு பூமிக்கு அருகில் வரும் முதல் பெரிய உடுக்கோள் ஆகும். இது 4.6 தடவை பூமியிலிருந்து நிலவுக்குள்ள தூரம் அதாவது 1.8 மில்லியன் கி.மீ. தூரம் கடந்து பறந்து வந்தது.

உடுக்கோளின் பாதைப் பற்றிய தரவுகளைப் பல ஆண்டுகளாகக் கண்காணித்து வருவதால், விஞ்ஞானிகள் அதன் பாதையை மிகவும் நம்பிக்கையுடன் கணிக்கும் திறன் கொண்டவர்களாக உள்ளனர்.

இந்த உடுக்கோள் 600-1,400 மீட்டர் பரப்பளவு கொண்டதாகவும், சந்திரனைப் போல் இருமுறை பிரதிபலிப்பதாகவும் இருக்கும். ஆனால் நமது வெறும் கண்களுக்குத் தெரியாது. பார்வையாளர்கள் புதன்கிழமை அன்று தொடங்கி ஒன்று அல்லது இரண்டு இரவுகள் வீட்டில் இருக்கும் தொலைநோக்கி மூலம் பார்க்க முடியும்.
J025 இன் பூமியை நோக்கிய இந்தப் பயணமே (அடுத்த 500 ஆண்டுகளையும் சேர்த்து) பூமிக்கு மிக நெருக்கமாக வந்த பயணமாக இருக்கும்.

இதைப் போலவே 2004 ஆம் ஆண்டில், டௌடாடிஸ் என்ற 5-கிமீ அகலமுள்ள உடுக்கோள் நான்கு சந்திர தூரங்கள் அதாவது பூமியிலிருந்து 1.6 மில்லியன் கி.மீ. தூரம் கடந்து வந்தது.

2027 ஆம் ஆண்டில் பூமியிலிருந்து 380,000 கி.மீ. தூரம் அல்லது சந்திரனுக்கு சற்று குறைவான தொலைவில் 1999 AN10 என்ற 800 மீட்டர் அகலமுள்ள உடுக்கோள் பயணிக்கப் போவதாகவும் நாசா விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர்.
தற்போது புதன்கிழமையன்று 2014J025 வெற்றிகரமாகப் பூமிக்கருகே எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாமல் கடந்து சென்றது.