குறுங்கோள்கள் தாக்கியதால் கொடைக்கானல், நீலகிரி பள்ளத்தாக்குகள் உருவாயின: இரு விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

மைசூரு:
800 மில்லியன் முதல் 550 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணில் இருந்து  றுங்கோள்கள் தாக்கியதையடுத்து,  கொடைக்கானல் மற்றும் நீலகிரியில் பள்ளத்தாக்கு ஏற்பட்டதாக, இரு விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.


இந்திய தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் விண்ணிலிருந்து விழுந்த குறுங்கோள்கள் தாக்கியதையடுத்து, டயனோசர்கள் முற்றிலும் துடைத்தெறியப்ப்பட்ட விவரமும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இத்தகைய குறுங்கோள்கள் தாக்கியதால் தமிழகத்தில் கொடைக்கானல் மற்றும் நீலகிரியில் பள்ளத்தாக்கு ஏற்பட்டது உண்மைதான் என்று மங்களூர் பல்கலைக்கழக முன்னாள் கடல் நிலவியல் பேராசிரியர் கே.ஆர். சுப்பிரமணியா மற்றும் மைசூர் பல்கலைக்கழக புவி அறிவியல் பேராசிரியர் கே.என் பிரகாஷ் நரசிம்மா ஆகியோர் நடத்திய ஆய்வில் உறுதி செய்துள்ளனர்.

மெகாஸ்கோப் மற்றும் மைக்ரோஸ்கோப் உதவியுடன் இரு மலைகளிலும் நடத்திய ஆய்வில், ரசாயன தடயங்கள் இருப்பதையும் அவர்கள் உறுதி செய்தனர்.

இவர்களது ஆய்வுக் கட்டுரை, கடந்த 2018-ம் ஆண்டு சிறந்த ஆய்வுக்கான ராதாகிருஷ்ணன் விருதை வென்றது.

இரு விஞ்ஞானிகளும் இது குறித்து கூறும்போது, “நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு இடையே காவேரி பள்ளத்தாக்கு உள்ளது. பாலக்காடு மலைப்பாதையும் திம்மம் தொடர்ச்சி மலையும் காவேரி பள்ளத்தாக்கின் ஒரு பகுதி.

இதற்கு புவிசார் ஆதாரமாக கர்நாடகாவில் உள்ள பேலக்காவடி மற்றும் சிவனாசமுத்ரா ஆகிய இடங்கள் உள்ளன.
இந்த இடங்கள் இணையும் இடம், 10o20′ முதல் 11030′ வடக்கு அட்ச ரேகையிலும், 76050′ முதல் 780 கிழக்கு தீர்க்க ரேகையிலும், மத்திய பள்ளத்தாக்கு 110 வடக்கு மற்றும் 77030′ கிழக்கு நோக்கியும் நெருக்கமாக அமைந்துள்ளன.

இந்த பள்ளத்தாக்கு 120 கி.மீ வரை நீண்டுள்ளது. இந்த குறுங்கோள்கள் 800 மில்லியன் ஆண்டுகளிலிருந்து 550 மில்லியன் ஆண்டு காலக்கட்டத்தில் முன்பு இப்பகுதியை தாக்கியிருக்கலாம்.

அந்த காலக்கட்டத்தில் 5 கி.மீ பரப்பளவில் புவி சார்ந்த உயிரினம் வாழ்ந்தற்கான ஆதாரங்கள் சாட்டிலைட் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.