ஆஸ்ட்ராஸெனகா & ஆக்ஸ்போர்டு உருவாக்கிய தடுப்பு மருந்து சிறந்தது: சீரம் இன்ஸ்டிட்யூட்

புனே: ஆஸ்ட்ராஸெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து, பயன்மிக்கதாய் இருப்பதாக அறிவித்துள்ளது இந்தியாவின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட்.

அந்த மருந்திற்கான பரிசோதனைகள், இந்தியாவில் பாதுகாப்பான மற்றும் நம்பிக்கை தரும் வகையில் போய்க்கொண்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆஸ்ட்ராஸெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலை சார்பாக, உற்பத்தியில் ஏற்பட்ட பிழை ஒப்புக்கொள்ளப்பட்டப் பிறகு, இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

“ஆஸ்ட்ராஸெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலை இண‍ைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது மற்றும் நல்ல பயன்விளைவை அளிக்கவல்லது. அதன் குறைந்தளவு தாக்கமே 60% முதல் 70% என்ற அளவில் இருப்பதால், கொரோனா வைரஸுக்கு எதிரான ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த தடுப்பு மருந்தாக உள்ளது” என்று சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.