இங்கிலாந்து:
புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டிற்கு ஆஸ்ட்ராஃஜெனிகாவின் தடுப்பூசி பயனுள்ளதாக அமையும் என்று இங்கிலாந்து அரசு உறுதி அளித்துள்ளது
இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜை தலைமையிடமாகக் கொண்ட பிரிட்டிஷ் மருந்து தயாரிக்கும் நிறுவனமான ஆஸ்ட்ராஜெனிகா தாங்கள் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பூசி, புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டிற்க்கு  எதிராகவும் நன்கு வேலை செய்யும் என்று தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் கொரோன வைரஸ் பிரழ்வின் தாக்கத்தை முழுமையாக ஆராய ஆய்வுகள் நடந்து வருவதாகவும் ஆஸ்ட்ராஃஜெனிகா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஆஸ்ட்ராஃஜெனிகாவின் செய்தி தொடர்பாளரும், தங்களுடைய தடுப்பூசி புதிய வைரஸ் மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.