மக்களவை தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளை திமுகவே வெல்லும்: ஜோதிடர் பாலாஜி ஹாசன் அளித்த பேட்டியின் மீள் பதிவு (வீடியோ)

தமிழகத்தில் நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியே அதிக தொகுதிகளை கைப்பற்றும் என சமீபத்தில் நமது பத்திரிகை.காம் இணைதளத்திற்கு பிரபல ஜோதிடர் ஒருவர் அளித்திருந்த பேட்டி, தற்போது உண்மையாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணி தொடர்ந்து காலை முதல் முன்னிலை வகித்து வருகிறது. தேனி தொகுதியை தவிற்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் படுதோல்வியை சந்தித்துள்ளன.

கடந்த மாதம் நமது பத்திரிக்கை.காம் இணையதளத்திற்கு, சேலத்தை சேர்ந்த பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், தமிழகத்தில் பெரும்பாலான தொகுதிகளை திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்ததோடு, அதிமுக – அமமுக இணையுமா ? இரட்டை தலைமையில் அதிமுக செயல்படுமா ? அல்லது சசிகலாவின் கைக்குள் சிக்குமா ? டிடிவி தினகரனின் எதிர்காலம் என்னவாகும் ? ஸ்டாலின் முதல்வர் ஆவாரா ? போன்ற பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்திருந்தார்.

தற்போது வெளியான மக்களவை தேர்தல் முடிவுகள், ஜோதிடர் பாலாஜி ஹாசன் தெரிவித்ததுடன் ஒத்துப்போகும் நிலையில், மறு பதிவாக அவர் அளித்திருந்த பேட்டியை மீண்டும் பதிவிடுகிறோம்.

ஜோதிடர் பாலாஜி ஹாசன் அளித்த பேட்டியின் முதல் பகுதி இதோ உங்களுக்காக….

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: AIADMK AMMK, Balaji Hassan, dmk, Kamal, KATHIR ANAND, Priya gurunathan, ramadoss, stalin, ttv
-=-