பிரபல ஜோதிடர் பெஜன் தாருவல்லா கொரோனாவுக்கு பலி…! ராஜீவ் படுகொலை, மோடி வெற்றிகளை கணித்தவர்

அகமதாபாத்: பிரபல ஜோதிடர் பெஜன் தாருவல்லா அகமதாபாத்தில் காலமானார்.

அடல் பிஹாரி வாஜ்பாய், மொரார்ஜி தேசாய் மற்றும் நரேந்திர மோடி ஆகியோரின் வெற்றிகளையும், ராஜீவ் காந்தியின் படுகொலைகளையும்  தாருவல்லா கணித்திருந்தார்.

கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் காலமாகி உள்ளார். அவரது மரணத்தை குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி ட்விட்டரில் உறுதிப்படுத்தினார்.

குஜராத் காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியாவும் இரங்கல் தெரிவித்தார். கோவிட் 19 காரணமாக புகழ்பெற்ற ஜோதிடர் வழிகாட்டி ஸ்ரீ பெஜன் தாருவல்லா மறைந்ததைக் கேட்டு வருத்தப்படுகிறேன் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

தாருவல்லா அமெரிக்காவின் சிறந்த ஜோதிடர்களில் ஒருவராக அறியப்பட்டவர். உதய்பூரின் இளவரசர் லட்சியராஜ் சிங் மேவார் மற்றும் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே உள்ளிட்ட பல பிரபலங்கள் அவரிடம் ஆலோசனை பெற்றவர்கள் ஆவர்.