நிலவில் பாதம் பதித்த 4ஆம் வீரர் மறைவு

வாஷிங்டன்

நிலவில் இறங்கிய நான்காம் விண்வெளி வீரர் ஆலன் பீன் மரணம் அடைந்தார்.

நிலாவில் முதன் முதலில் பாதம் பதித்த விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்டிராங் என்பது தெரிந்ததே.   அதன் பிறகு 12 விண்வெளி வீரர்கள் நிலவில் இறங்கி ஆராய்ச்சி நடத்தி உள்ளனர்.  இந்த வரிசையில் நான்காவதாக நிலவில் பாதம் பதித்த வெண்வெளி வீரர் ஆலன் பீன் ஆவார்.  இவர் அதிக பட்சமாக 31 மணி நேரம் நிலாவில் நடமாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு நாசாவின் விண்வெளி ஆய்வு நிலையமான ஸ்கைலாப் பயணத்திலும் ஆலம் பீன் இடம் பெற்றார்.   தற்போது 86 வயதாகும் ஆலம் பீன் உடல்நிலைக் குறைவு காரணமாக ஹூஸ்டன் மருத்துவ மனையில் கடந்த இரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார்.  ஆனால் நேற்று சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.

அவர் மறைவு அமெரிக்காவை மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றின் மக்களையும் துயரில் ஆழ்த்தியுள்ளது