கொரோனா முன்னெச்சரிக்கை: ‘நாராப்பா’ படப்பிடிப்பு பாதிப்பு….!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் பரவி வருகிறது.

இதனைத் தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று 3 பேருக்கு இருப்பதை உறுதி செய்துள்ளது தமிழக அரசு.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் தமிழில் நடித்து வெளியான ‘அசுரன்’ தெலுங்கு ரீமேக் ‘நாராப்பா’ படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்கத் திட்டமிடப்பட்டது. நீண்ட நாட்களாகத் தமிழக எல்லையோரத்தில் நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு கரோனா முன்னெச்சரிக்கை காரணமாக முதன்முறையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில், ‘நாராப்பா’ படம் படப்பிடிப்பு கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

படக்குழுவினர் ஹைதராபாத் திரும்பியுள்ளனர். சூழ்நிலை சீரானதும் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும். முடிந்தவரை அனைவரும் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க விரும்புகிறோம். நலமாகவும் பாதுகாப்புடனும் இருக்கவும்” என்று தெரிவித்துள்ளது.