கன்னடத்தில் ரீமேக் ஆகும் தனுஷின் ‘அசுரன்’….!

வெக்கை என்ற நாவலை தழுவி வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த படம் அசுரன்.இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக தயாரிப்பாளருக்கு வருமானம் ஈட்டி கொடுத்தது.

இந்த படத்தினை தற்போது தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர்.

இந்நிலையில் தற்போது அசுரன் படத்தை கன்னடத்திலும் ரீமேக் செய்யவுள்ளனர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி நடிகரான சிவ ராஜ்குமார் தான் ஹீரோவாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.

இயக்குனர் வெற்றிமாறன் அசுரன் கன்னட ரீமேக் படத்தின் மூலமாக அங்கு தயாரிப்பாளராக அறிமுகம் ஆகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் படத்தை பிரபல இயக்குனர் ஜாக்கோப் வர்கீஸ் என்பவர் தான் இயக்குகிறார்.