கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் தனுஷ் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவிருக்கும் படம் ‘அசுரன்’.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். அசுரன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் ‘அசுரன்’. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று துவங்கி உள்ளதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இப்படத்தில் தனுஷுடன் முக்கிய கதாபாத்திரத்தில் கருணாஸ் மகன் கென் கருணாஸ் நடித்துள்ளார்.