தனுஷ் பிறந்தநாளன்று வெளியாகும் “அசுரன்” பட டீசெர்…!

--

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் அசுரன்.

இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தனது ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் அப்பா, மகன் என டபுள் ரோலில் நடிக்கிறார் தனுஷ் அடுத்த மாதத்துடன் படப்பிடிப்பை முடித்துவிட படக்குழு முடிவு செய்துள்ள இந்த நிலையில் படத்தின் டீசரை தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.