கேரளா: எழுத்தறிவு இயக்கத் தேர்வில் 96 வயது பாட்டி 98 மதிப்பெண் எடுத்து சாதனை!

கேரள மாநிலத்தில் முதியோருக்கான எழுத்தறிவு இயக்கமான ‘அக்‌ஷரலக்‌ஷம்’ தேர்வில் 96 வயது பாட்டி கார்த்தியானி அம்மா 100-க்கு 98 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார்.

96-yrs-old

கேரள மாநிலத்தில் இளமைக்காலத்தில் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்காக அக்‌ஷரலக்‌ஷம் என்னும் பெயரில் எழுத்தறிவு இயக்கத்தை அம்மாநில அரசின் கல்வித்துறை நடத்தி வருகிறது. இதில் சேர்ந்து பயில்பவர்களுக்கு வாசித்தல், எழுதுதல், கணிதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்டுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற இறுதித் தேர்வை எழுதியவர்களில் 42 ஆயிரத்து 933 பேர் வெற்றி பெற்றனர். இந்த தேர்வை எழுதியவர்களில் மிகவும் முதியவரான 96 வயது பாட்டி கார்த்தியானி அம்மா 100-க்கு 98 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த கார்த்தியானி அம்மா ‘ சாதிக்க வயது ஒரு பொருட்டே அல்ல’ என்பதை நிரூபித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.