தொடர்ந்து ஆறாம் நாளாக கலிபோர்னியாவில் காட்டுத் தீ

சான் பெர்னாண்டோ, கலிபோர்னியா

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் தொடர்ந்து ஆறாம் நாளாகக் காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.

கடந்த 6 நாட்களுக்கு முன்பு தெற்கு கலிபோர்னியாவில் சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் தீப்பிடித்தது.  அந்தத் தீ நேற்று பெருமளவில் பரவியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 14000 தீயணைப்பு வீரர்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களில் இருந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து வருகின்றனர்.

அப்பகுதியில் தற்போது தொடர்ந்து பலமான காற்று வீசி வருவதால் தீயை அணைப்பது வீரர்களுக்கு கடும்  சவாலாக இருந்து வருகிறது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் ஒரு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்.   ஆயினும் 76 வீடுகளும், 31 கட்டிடங்களும் காட்டுத் தீயில் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தீயால் 7 ஆயிரத்து 542 ஏக்கர் நிலப்பரப்பு சாம்பலாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கலிபோர்னியா வரலாற்றில் மிகப்பெரும் காட்டுத் தீ விபத்தாக இது பதிவாகியுள்ளது.  தீயை அணைக்க கிட்டத்தட்ட 14,000 தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.  இந்த காட்டுத் தீ விபத்தை முன்னிட்டு லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ்வேகாஸ் உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகள்  மூடப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 14000 firemen, 6 days, Forest fire, San fernando, South california
-=-