சென்னை : 173 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம் மீண்டும் துவக்கம்

சென்னை

யர்நீதிமன்ற வளாகத்தில் முதலில் செயல்பட்டு வந்த கலங்கரை விளக்கம், பழுதுபார்க்கப்பட்டு அடுத்த வாரம் முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள பழமையான கலங்கரை விளக்கம் 1844ஆம் ஆண்டு கட்டப்பட்டு 1894 வரை புழக்கத்தில் இருந்தது.  பிரிட்டன் அரசால் இந்தியாவில் கட்டப்பட்ட இரண்டாவது கலங்கரை விளக்கம் இதுவே ஆகும்.   இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 135 அடி ஆகும்.  1894க்குப் பின் 160 அடி உயரத்தில் கட்டப்பட்ட மற்றொரு கலங்கரை விளக்கம் செயல்பட ஆரம்பித்ததும் இதன் செயல்பாடு நிறுத்தப்பட்டது.

தற்போது இந்த இரு கலங்கரை விளக்கங்க கட்டிடங்களும் பழுது பார்க்கப்பட்டுள்ளது.  வரும் செப்டம்பர் 16ஆம் தேதி அன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இதை துவங்கி வைக்கிறார்.  அத்துடன், “இந்தியாவின் முதல் நவீன நகரம் மெட்ராஸ்” என்னும் புகைப்பட கண்காட்சியையும் துவக்கி அவர் துவக்கி வைப்பார்.

Leave a Reply

Your email address will not be published.