டில்லி

முன்னாள் அமைச்சர் அ ராசா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்ட 2 ஜி வழக்கில் சிபிஐ அளித்த மேல் முறையீட்டு மனு மீது நேற்று விசாரணை தொடங்கியது.

 

சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ பி சைனி 2 ஜி வழக்கை விசாரித்து வந்தார்.  இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக பிரமுகருமான அ ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.   இந்த வழக்கு விசாரணையில் பல திருப்பங்களைக் கண்ட பிறகு ஓ.பி சைனி தனது தீர்ப்பை வழங்கினார்.

அந்த தீர்ப்பில் சிபிஐ சரியான மற்றும் நம்புதற்குரிய வகையில் எவ்வித ஆதாரமும் சமர்ப்பிக்காததால் சந்தேகத்தின் பலனைக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அளித்து அனைவரையும் ஓ பி சைனி விடுதலை செய்வதாக அறிவித்தார்.

இதையொட்டி டில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ  மேல் முறையீடு செய்தது.   இந்த வழக்கு விசாரணையை தற்போது நீதிபதி பிரிஜேஷ் சேத்தி விசாரணை செய்ய உள்ளார்.

நேற்று சிபிஐ அளித்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.