டில்லி : பாஜகவுக்கு எதிராக 27 ஆம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம்

டில்லி

ரும் 27 ஆம் தேதி அன்று டில்லியில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது.

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி அமைக்க பல கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன . சென்ற மாதம் கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தை  நடத்தின. அந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி, முக ஸ்டாலின், தேஜஸ்வி யாத்வ், அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.

இந்த மாதம் 13 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தனது டில்லி இல்லத்தில் ஒரு கூட்டம் நடத்தினார்.   இந்த கூட்டத்தில் அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திருணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். பாஜகவுக்கு எதிரான கூட்டணி குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 27 ஆம் தேதி டில்லியில் மற்றொரு எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜகவை மக்களவை தேர்தலில் எதிர் கொள்வது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ளப் போகும் தலைவர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி