தராபாத்

ரு மாணவியை சீருடை அணிந்து வராததால் கழிவறைக்குள் நிற்கச் சொல்லி பள்ளியில் தண்டித்துள்ளனர்.

ஐதராபாத் நகரில் ஆர் சி நகரில் உள்ள ஒரு பள்ளியில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.  இந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் சீருடை அணியாமல் வந்துள்ளார்.  அந்த பள்ளியின் விளையாட்டுக் கல்வி ஆசிரியை அதற்கு தண்டனையாக மாணவர்கள் கழிப்பறையில் நிற்க வைத்துள்ளார்.  இந்த சம்பவம் வெளியே பரவவே அங்குள்ள மக்கள் பள்ளி வாசலில் போராட்டம் நடத்தி உள்ளனர்.  பிறகு அந்த மாணவி வகுப்பில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

அந்த மாணவியின் தந்தை, “சனிக்கிழமை என்பதால் நாங்கள் எங்கள் மகளை பள்ளியில் இருந்து நேரே வெளியே அழைத்துச் செல்ல இருந்தோம்.   அதனால் அவருக்கு சீருடை அணிவிக்காமல் வேறு உடை அணிவித்து பள்ளிக்கு அனுப்பினோம்.  இந்த தகவலை பள்ளி டைரியில் எழுதி அனுப்பினோம்.   ஆனால் அதை என் மகள் காட்டியும் அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.  அவமானத்தால் என் மகளுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.  மற்ற மாணவர்களின் முகத்தை பார்க்கவும் அவள் இப்போது கூச்சப் படுகிறாள்” என வருத்தத்துடன் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட ஆசிரியை, ”அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை.  ஏன் சீருடை அணிந்து வரவில்லை என கேட்டேன்,  அவ்வளவுதான், உடனே அந்த மாணவி அழுதபடி கழிப்பறை வாயிலில் போய் நின்றுக் கொண்டார்.  நான் அவருக்கு கழிப்பறை உள்ளே நிற்க வேண்டும் என தண்டனை அளிக்கவில்லை” என மறுத்துள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்த தெலுங்கானா தகவல் தொடர்பு அமைச்சர் ராமாராவ் இது குறித்து தாம் கல்வி அமைச்சரிடமும், துணை முதல்வரிடமும் பேசுவதாக தெரிவித்துள்ளார்.  மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில் இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.