ரஷ்யாவில் குண்டுவெடித்து 10 பேர் பலி

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்:

ரஷ்யாவின் புகழ்பெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயில்நிலையத்தில் இன்று மாலை நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் உள்ள புகழ்பெற்ற ரயில்நிலையங்களில் ஒன்றான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயில்நிலையத்தில் இன்று மாலை திடீரென குண்டு வெடித்தது. இதில் 10 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் பலி எண்ணிக்கை 20க்கு மேல் இருக்கும் என்று ரஷ்ய ஊடங்களில் செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது.