அரியானா: லாரி, கார், ஜீப் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 12 பேர் பலி!

அரியானா மாநிலத்தில் வேகமாக வந்த லாரி, கார் மற்றும் ஜீப் மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில் 12பேர் உயிரிழந்தனர்.

accident

அரியானா மாநிலம், சோனிபட் மாவட்டத்தில் உள்ள கோஹானா-பானிபட் நெடுஞ்சாலை வழியாக சென்றுக் கொண்டிருந்த லாரி, முட்லான கிராமத்தில் சென்றுக் கொண்டிருந்த கார் மற்றும் ஜீப் மீது அடுத்து மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 12பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 7பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும்தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.