ஆப்கன் அரசு அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்…15 பேர் பலி

--

காபுல்:

ஆப்கானிஸ்தானில் அகதிகள் நலவாழ்வு இயக்குனரகத்தில் வெளிநாட்டில் இருந்து நிதி அளிப்பவர்கள் மற்றும் அதிகாரிகள் இடையேயான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் அலுவலகத்தின் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். அதிரடியாக அலுவலகத்தினுள் நுழைந்த பயங்கரவாதிகள் வெளிநாட்டினர் உட்பட பலரை துப்பாக்கி முனையில் சிறைபிடித்தனர்.

இதையடுத்து அவர்களை மீட்க அதிரடி படையினர் முயற்சித்தனர். இந்த முயற்சியில் இருதரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இந்த மோதலில் இதுவரை 15 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர். அலுவலகத்தினுள் பயங்கரவாதிகள் யாரேனும் பதுங்கி இருக்கின்றன்றனரா? என தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.