Random image

தெற்கு சூடானில் நடந்த விமான விபத்தில் 19 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் நடந்த விமான விபத்தில் பயணிகள் 19 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

sudan

தெற்கு சூடான் தலைநகரான ஜூபாவில் இருந்து இரோல் நகருக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணிகள் விமான சென்றுக் கொண்டிருந்தது. அப்போது பனிமூட்டம் காரணமாக வழித்தடத்தில் விமானம் விபத்திற்குள்ளானது. இதுகுறித்து, அந்நாட்டு ஊடகம் தரப்பில் கூறுவதாவது, “ ஞாயிற்றுக்கிழமை தெற்கு சூடானில் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற விமானம் ஒன்று புகை மூட்டம் காரணமாக தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் விமான ஓட்டிகள் உட்பட பயணம் செய்த 19 பேர் உயிரிழந்தனர். 4பேர் மட்டுமே உயிர் தப்பினர் “ என்று கூறப்பட்டது.

விபத்து குறித்து ஜூபா மாகாணத்தின் அமைச்சர் பேசுகையில், ” விபத்துக்குள்ளான விமானம் தலைநகர் ஜுபாவிலிருந்து இரோல் நகருக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது வழித்தடத்தில் பனிமூட்டம் காரணமாக விமானம் தடுமாறி விபத்துக்குள்ளாகியது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

விமான விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த என்று தெற்கு சூடான் அரசு உத்தரவிட்டுள்ளது.