சிரியா: தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் 38 பேர் பலி

--

சிரியாவின் தென் மாகாணத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புகளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

sucide-bomb

தென் மாகாணத்தில் பரபரப்பாக காணப்படும் ஸ்வீடா பகுதியில் புதன் கிழமை மூன்று தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்துள்ளதாக சிரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல் குறித்து இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என சிரிய அரசு தெரிவித்துள்ளது.

உடலின் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வந்த 3 தீவிரவாதிகள் மார்க்கெட் பகுதிகளில் அதனை வெடிக்க செய்துள்ளனர். இந்த தாக்குதலில் 12 பாதுகாப்பு படையினர் உட்பட 38 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் இஸ்லாமிய அரசு போராளிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிகாலை 5 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரிய ஊடகத்தை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார். மேலும், 27 ஆக இருந்த பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிரிய அதிபருக்கு எதிராக சன்னி பிரிவை சேர்ந்த முஸ்லீம் போராளிகள் கடந்த ஆறு வருடமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் அமெரிக்கா மற்றும் ரஷ்ய படைகளும் ஈடுபட்டு தங்கள் பங்கிற்கு வான்வழி தாக்குதல்களை நடத்தி வந்தன. கடந்த ஆறு வருடமாக நடந்து வரும் உள் நாட்டு போரில் கிட்டத்தட்ட 3லட்சம் பொதுமக்கள் இறந்துள்ளனர்.