துக்க நிகழ்ச்சியில் சாராயம் விநியோகம்: உ.பி., உத்தரகாண்டில் 34 போ் உயிாிழப்பு

லக்னோ:

துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றவர்கள், அங்கு வழங்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்ததில் பலர் உயிரிழந்து   இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் பலுபுா் கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள  அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, அவர்களின் உறவினர்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர்.

விருந்தினர்களுக்கு துக்க வீட்டார்  கள்ளச்சாராயம் விநியோகித்து உற்சாகப்படுத்தி உள்ளனர். அதை சாப்பிட்ட பெரும்பாலோர்  அடுத்தடுத்து மயங்கி விழுந்தனா். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

‘இதையடுத்து, அவர்களை உடடினயாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் தொடர் மரணம் ஏற்பட்டு வருகிறது. இதுவரை 16 பேர் உயிரழந்து இருப்பதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் பல்லுபூர், பிந்து காடக், பினரசி, பால்ஸ்வாகஜ், தாகோவாலி ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் உடல்நிலை மோசமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.  இந்த விபத்தில் தற்போது வரை 16 போ் உயிாிழந்திருப்பதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் சஹரன்பூா் மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் அருந்திய 18 போ் உயிாிழந்துள்ளனா்.

மேலும் கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போன 13 அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்து கூடுதல் காவல் ஆணையர் அர்ச்சனா கேஹார்வார் உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

தேஜ்பூர் கிராமத்தில் காவல் ஆய்வாளர் அஜய் ரவுதலா, மாவட்ட நீதிபதி தீபக் ராவத் மற்றும் காவல்துறை மூத்த அதிகாரி ஜன்மஜேய் கந்தூரி ஆகியோர் முகாமிட்டுள்ளனர்

மொத்தமாக இரு மாநிலங்களிலும் சோ்த்து கள்ளச்சாராயத்தால் 34 போ் உயிாிழந்திருப்பதாக தொிவிக்கப்பட்டுள்ளது.