சூடான் நாட்டில்  ராணுவத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில்,  போராட்டக்காரர் கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 35 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூடானில்  ராணுவப் புரட்சி காரணமாக  ஏற்கனவே அதிபரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதிபரும் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், புதிய அதிபராக பதவி ஏற்ற ராணுவ தளபதிக்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கியதால், அவரது தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அங்கு, சிவில்  ஆட்சியை ஏற்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சூடான் தலைநகர் கர்த்தூமில் உள்ள ராணுவ தலைமையகத்திற்கு வெளியில் ஏராளமானோர் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில், போராட்டக்காரர் களை ஒடுக்க தீவிர நடவடிக்கை ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில், குழந்தை உள்ளிட்ட 13 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ள தாக முதல்கட்ட தகவல் வெளியானது. இந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 35 எட்டியுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

போராட்டக்ககாரர்கள் மீது மிருகத்தனமாக  து ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு ஐ.நா. சபை பொது செயலாளர் அண்டோனியா குட்டரஸ் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதேபோல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளும் இந்த தாக்குதலுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளன.