வாஷிங்டன்: அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வரும் நிலையில்,  டெக்சாஸ் நெடுஞ்சாலையில் 130 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சங்கிலி தொடர் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்  6 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

மெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் கடுமையான பனிப் பொழிவு நிலவி வருகிறது. இதற்கு அங்கு வீசும்ஆர்க்டிக் கடல் காற்று  காரணம் என்று கூறப்படுகிறது.  இது அங்குள்ள மக்களை வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வாட்டி வருகிறது.

இந்த நிலையில்,  அமெரிக்காவின் டல்லாஸ் மற்றும் டெக்சாஸ் உள்ளிட்ட நகரங்களில் இருந்து 50 கி.மீ. தொலைவில்  அமைந்துள்ள போர்ட் வொர்த் நகரின் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் திடீரென ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. சுமார் 130 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றொடன்று ஒன்று மோதியதாகவும், இதில், சிறிய ரக கார்கள், சொகுசு கார்கள், 18 சக்கரங்களை கொண்ட லாரிகள்  சிக்கின. இந்த சங்கிலித்தொடர் மோதல் காரணமாக,  அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த  சாலையில் முழுமையாக போக்குவரத்து முடங்கியது.

இந்த கோர விபத்திற்கு சாலையில், பனி படர்ந்து காணப்பட்டதே  காரணம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பனி குவியலால் சாலைகளில் சென்ற வாகனங்கள் வழுக்கி சென்றதால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில், 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100 பேர் படுகாயமடைந்ததாகவும், அவர்களில்  36 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.