பஞ்சாப் ரயில் விபத்து எண்ணிக்கை 61ஆக உயர்வு: 8 ரயில்கள் ரத்து

பஞ்சாப்:

நேற்று இரவு நடைபெற்ற தசரா பண்டிகையின்போது ராவணன் எரிக்கப்பட்ட சமயத்தில்,பொதுமக்கள் அருகில் உள்ள ரயில்வே டிராக்கில் சென்றபோது அந்த வழியாக வந்த ரயில் மோதி பரிதாபமாக இறந்தனர்.

அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம்,. அமிர்தசரஸ் அருகே ஜோடா பதக்கில் நடைபெற்றது. இந்த கோர விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.  மேலும் காயமடைநத் 72 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து,  அமிர்தசரஸ்-மனவாலா இடையே 8 ரயில்கள் ரத்து செய்யப்ப்டடு உள்ளது.  5 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கபட்டு வருகிறது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசரா பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜோதா பதக்கில் ராவணனின் உருவபொம்மை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

இது சவுரா பஸார் பகுதியில் ரயில் பாதையின் அருகே நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் ரயில் பாதையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே பதன்கோட்டில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.

ரயில் ஒலி எழுப்பிக் கொண்டே வந்தது. ஆனால் தசரா கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த மக்கள் ரயில் வருவதைக் கவனிக்கவில்லை. இந்நிலையில் அதிவேகமாக வந்த ரயில் பொதுமக்கள் மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கோரமான  அமிர்தசரஸ் அருகே ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும்,  மாநிலஅரசு சார்பில் ரூ.5 லட்சமும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் சென்று பார்வையிட்டார். காயம் அடைந்தவர்களுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களிடம் வலியுறுத்தினார்.

நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்துக்கு குடியரச தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பஞ்சாப் முதல்வர் வி.பி.சிங் பட்னோர் உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.