க்னோ

டி சி எஸ் நிறுவனத்தின் லக்னோ கிளை மூடப்படுவதாக அறிவிப்பு வந்ததையொட்டி, அங்கு பணிபுரியும் ஊழியர்கள், தங்கள் குடும்பத்துடன் லக்னோ நகர தெருக்களில் மவுன ஊர்வலம் நடத்தினர்.

டிசிஎஸ் நிறுவனம் தனது லக்னோ கிளையை மூடிவிட்டு, வேறு இடங்களுக்கு அங்குள்ள வேலைகளை மாற்றப்போவதாக அறிவித்துள்ளது.  இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  தவிர இது தற்போதைய பாஜக அரசுக்கு ஒரு கவுரவ பிரச்னை ஆகி விட்டது.  முதல்வர் யோகி வரும் 10ஆம் தேதியன்று டிசிஎஸ் நிறுவனத்தின் உயர் அதிகார்களுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அரசு தரப்பில் பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து, துணை முதல்வர் தினேஷ் ஷர்மா, “டிசிஎஸ் லக்னோவில் இருந்து செல்வதை தடுக்க தேவையான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும்.  அரசு இவ்வளவு சலுகைகள் அறிவித்தபின் தக்க காரணம் சொல்லாமல் லக்னோவை விட்டு வெளியேற முடியாது” என தெரிவித்தார்.

இதையொட்டி டிசிஎஸ் ஊழியர்கள் சுமார் 2000 பேர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் லக்னோவில் மவுன ஊர்வலம் நடத்தினர்.  ஊர்வலம் ராம்மனோகர் லோகியா பார்க்கில் இருந்து ஆரம்பித்தது.   சிறுவர்களும் கைகளில் பதாகைகள் ஏந்தியபடி வந்தார்கள்.  அந்தப் பதாகையில் “சி ஈ ஓ அங்கிள்.  எங்கள் மாநிலத்தின் எதிர்காலம் உங்கள் கையில்” என எழுதப்பட்டிருந்தது.   ஊர்வலத்தின் முடிவில் மனிதச் சங்கிலி போராட்டமும் நிகழ்த்தப்பட்டது. இதில் பல சமூத தொண்டு நிறுவனங்களும் கலந்துக் கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.