Random image

மும்பை மற்றும் புனேவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90 ஐ நெருங்குகிறது

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் புனேவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ90 ஐ நெருங்குகிறது.

டில்லியில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.80ஐ கடந்து விற்பனையானது. இதை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.87.77க்கும், டீசல் ரூ.75.79க்கும் விற்பனையானது.

ரூபாய் மதிப்பு வீழச்சி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக டில்லியில் பெட்ரோல் விலை இவ்வளவு உச்சத்தை தொட்டது இதுவே முதன்றையாகும். இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.38க்கும், டீசல் ரூ.72.51க்கும் விற்பனையானது. நாட்டில் அதிகபட்சமான விலைக்கு பெட்ரோல் மும்பையில் விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.87.77க்கு விற்பனையாகிறது. இதேபோன்ற நிலை தான் புனேவிலும் நீடிக்கிறது. இந்த நிலை நீடித்தால் மும்பை மற்றும் புனேவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.90ஐ எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொரும் விலை என்பது உள்ளூர் வரி, டீலர்கள் கமிஷன், போக்குவரத்து செலவு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

எரிபொருள் விலை உயர்வு என்பது எங்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்று மத்திய அரசு கூறியதால் மக்கள் கோபத்திற்கு ஆளாக நேரிட்டுள்ளது. இதை கண்டித்து எதிர்கட்சிகள் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

லாரிகளுக்கு பயன்படுத்தப்படும் டீசல் விலை உயர்வால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும். அதனால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.48ம், டீசலுக்கு ரூ.15.33 கலால் வரியாக விதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.