எழுபது வயதில் அரசியலா?: ரஜினிக்கு பஞ்ச் வைக்கும் விஜய் அப்பா

ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதே நேரம் நடிகர் விஜய்க்கும்  அரசியல் ஆசை இருப்பது ஊரறிந்த ரகசியம்.

விஜய்யை அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர்தான் இயக்கி வருகிறார்.. அதாவது, அரசியல் விவகாரங்களில்.. என்பதும் அனைவருக்கும் தெரியும்.

இந்த நிலையில் விஜய்யின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள எஸ்.ஏ.சி., விஜய்யை வாழ்த்தியிருக்கிரார். அது ஓகேதான்.. அதோடு அரசியலும் பேசியிருக்கிறார்.

“மக்கள் தங்களை ஆள்பவர்களைத் தேர்ந்தெடுப்பதாக நினைக்கக்கூடாது. தங்களுக்கு வேலை செய்யும் வேலைக்காரனை தேர்ந்தெடுப்பதாக நினைக்க வேண்டும்” என்றெல்லாம் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி., “இப்போது இன்னொரு காந்தி பிறக்க வேண்டும். ஆம்…  இளைஞர்களிடமிருந்து இன்னொரு காந்தி அரசியலுக்கு வரவேண்டும். எழுபது, எண்பது வயதில் அரசியலுக்கு வந்தால் ஒண்ணும் செய்ய முடியாது” என்றும் கூறியிருக்கிறார்.

அதாவது மறைமுகமாக ரஜினியை கிண்டல் செய்திருக்கிறார்!

இரண்டு நடிகர்களுமே கட்சி துவங்கலே.. அதுக்குள்ள போட்டியா!