உ. பி யில் தொடரும் அவலம் : குழந்தைகள் மரணத்தில் மற்றுமொரு கோரக்பூர் ஆகும் ஃபருகாபாத்

ஃபருகாபாத்

பி மாநிலம் ஃபருகாபாத்திலும் கோரக்பூரை போல சென்ற மாதம் மட்டும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் 49 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் பல குழந்தைகள் பரிதாப மரணம் அடைந்தனர்.   அதே போல உத்திரப் பிரதேசத்தில் மற்றொரு நகரமான ஃபருகாபாத் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 49 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர்.

இது குறித்து உள்ளூர் தொலைக்காட்சியில் வந்த செய்தியைத் தொடர்ந்து முதல்வர் யோகியின் அமைச்சகம் இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளது.  மாவட்ட நீதிபதிக்கு இந்த மரணங்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.  மாவட்ட நீதிபதி ரவீந்திர குமார் நடத்திய விசாரணையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 49 குழந்தைகள் மரணமடைந்தது உண்மை என தெரிய வந்துள்ளது.  இது குறித்து மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலர் மற்றும் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் ஆகியோர் மேல் புகார் பதியப்பட்டுள்ளது.