லகின் மிக நீளமான மற்றும் அகலமான அடல் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து 72 மணி நேரத்தில் 3 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளது. செல்ஃபி மோகம் மற்றும் அதிவேகம் காரணமாக இந்த விபத்துக்கள் நடைபெற்றுள்ளது. தெரிய வந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இமாச்சல பிரதேசம் மாநிலம் மணாலியிலிருந்து லடாக்கின் லே பகுதியை இணைக்கும் நெடுஞ்சாலையில் 9.02 கிமீ தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ளது அடல் சுரங்கப்பாதை. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 மீட்டர் உயரம்(10 ஆயிரம் அடி) உயரத்தில் 9.02 கிமீ தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள அடல் சுரங்கப்பாதை தான் உலகிலேயே மிக உயரத்தில் அமைக்கப்பட்ட மற்றும் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை. மணாலியையும் லாஹாவ் – ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பகுதியையும் இணைக்கும் வகையில் இந்த சுரங்கபாதை உருவாக்கப்பட்டுள்ளது.

குதிரை லாடத்தின் வடிவத்தில் அமைந்துள்ள ஒரே சுரங்கமாக, இரண்டு லேன்கள் கொண்ட இந்தப் பாதையில், வாகனங்கள் செல்ல 8 மீட்டர் அகலத்துக்கு இடவசதி உள்ளது. 5.525 மீட்டர் உயரம் வரையிலான வாகனங்கள் இந்த சுரங்கப்பாதையில் செல்லலாம். இந்தப் பாதை 10.5 மீட்டர் அகலம் கொண்டது. 3.6 X 2.25 மீட்டர் அளவில் தீ பிடிக்காத, அவசர கால சுரங்கம், பிரதான சுரங்கத்துடன் இணைக்கப்பட்டதாக இருக்கிறது.

தினமும் 3,000 கார்கள் மற்றும் 1,500 லாரிகள் செல்லும் வகையிலும், அதிகபட்சம் மணிக்கு 80 கிமீ வேகத்தில் செல்லக் கூடிய வகையிலும் அடல் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.  சுரங்கப்பாதை என்றாலும் போதிய காற்றோட்ட வசதி கொண்டதாகவும், SCADA கட்டுப்பாட்டில் இயங்கும் தீயணைப்பு அம்சங்கள் கொண்டதாகவும் இந்த சுரங்கப்பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப் பாதைக்குள் ஒவ்வொரு 60 மீட்டருக்கும் ஒரு சிசிடிவி கேமரா, ஒவ்வொரு 500 மீட்டருக்கும் ஒரு அவசரகால வழி அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையின் 2 பக்கத்திலும் 1 மீட்டருக்கு நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது மணாலி – லே இடையிலான சாலைப்பயண தூரத்தை 46 கிமீ அளவிற்கும், பயண நேரத்தில் 4-5 மணி நேரம் குறைப்பதாகவும் அமைந்துள்ளது அடல் சுரங்கப்பாதை. இந்த சுரங்கப்பாதையை பிரதமர் மோடி கடந்த 3ந்தேதி திறந்து வைத்தார்.

இந்த சுரங்கப்பாதையில்,  கடந்த 72 மணி நேரத்தில் (3 நாளில்) 3 விபத்துக்கள் நடைபெற்றுள்ளதாக  எல்லை சாலைகள் அமைப்பு (பி.ஆர்.ஓ) மற்றும் மாவட்ட அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துஉள்ளனதார்.

புதிதாக திறக்கப்பட்ட சுரங்கப்பாதையை காணும் நோக்கில்,  நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள்  வருவதாகவும், அவர்கள் தங்களது வாகனங்களை சுரங்கப்பாதையினுள் அதிவேகமாக இயக்கியதால், 3 விபத்துக்கள் ஏற்பட்டு உள்ளது. இந்த விபத்துக்கள்  சுரங்கத்தின் உள்ளே நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளனர்.

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முழுமையாக புறக்கணித்து உள்ளனர், என்றும்  சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சவாரி செய்யும் போது செல்பி கிளிக் செய்கிறார்கள்,  இடையே வாகனங்களை நிறுத்தியும் செல்பி எடுத்துக்கொள்கிறார்கள், ஆனால், சுரங்கப்பாதையின் நடுவில் எங்கும் தங்கள் வாகனத்தை நிறுத்த அனுமதி கிடையாது என்று   பிரிகேடியர் கே.பி. அடல் டன்னலின் பி.ஆர்.ஓ தலைமை பொறியாளர் புருஷோத்தமன்  தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து கவலைத் தெரிவித்துள்ள குலுமணாலிர எஸ்பி. கவுரவ் சிங்,  சுரங்கப்பாதையில் பொறுப்பற்ற முறையில், வாகனம் ஓட்டுவதையும், அதிவேகமாக செல்வதையும் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது . அதற்காக சுரங்கப்பாதையின் உள்ளே டாப்ளர் ரேடாரை நிறுவியுள்ளோம், இது அதிக வேகத்தைக் கண்டறியும். நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை (40 கி.மீ முதல் 80 கி.மீ) மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், டீசல், பெட்ரோல், எல்பிஜி மற்றும் மண்ணெண்ணெய் போன்ற எரியக்கூடிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை அடுத்த இரண்டு மாதங்களுக்கு  தடை விதிக்கப்படுவதாகவும்,  பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தினமும் காலை 9 மணி முதல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை சுரங்கப்பாதை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சுரங்கப்பாதை முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் கனவுத் திட்டமாகும். பிரேம் குமார் துமால் தலைமையிலான பாஜக அரசு மாநிலத்தில் ஆட்சியில் இருந்தபோது 2010 ஆம் ஆண்டில் யுபிஏ தலைவர் சோனியா காந்தி இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

கடும் பனிப்பொழிவு காரணமாக ஆண்டுதோறும் சுமார்  6 மாத காலத்துக்கு இந்த பள்ளத்தாக்குப் பகுதிக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு வந்த நிலையில், அடல் சுரங்கப்பாதையால் இனிமேல் ஆண்டு முழுவதும் எந்தவிதமான சீதோஷ்ண நிலையிலும் போக்குவரத்து தடையில்லாமல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.