Random image

7 பேர் விடுதலை: அமைச்சரவை முடிவை ஆளுநர் ஏற்க வேண்டும்….ஸ்டாலின்

சென்னை:

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை கவர்னர் ஏற்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘ராஜீவ் கொலை வழக்கில் 27 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழக அமைச்சரவை முடிவினை ஏற்று, அனைத்து தமிழர்களும் மகிழ்ச்சியடையும் வகையில் ஆளுநர் உடனடியாக விடுதலை செய்யும் ஆணையை பிறப்பிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.