அதர்வா நடித்துள்ள ‘100’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு…!

அதர்வா நடித்துள்ள ‘100’ படத்தின் ரிலீஸ் தேதி, மே 9-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார்.

யோகி பாபு, ராதாரவி, மைம் கோபி, ராகுல் தேவ், ரமேஷ் கண்ணா, மதுமிதா, விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

மே 3-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த நிலையில், தற்போது மே 9-ம் தேதி (வியாழக்கிழமை) படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

எனவே, இந்த வாரம் கெளதம் கார்த்திக் நடித்துள்ள ‘தேவராட்டம்’ (மே 1), அருள்நிதி நடித்துள்ள ‘கே 13’ (மே 3) ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸாகின்றன.

கார்ட்டூன் கேலரி