இணையத்தில் வைரலாகும் அதர்வாவின் சிறுவயது புகைப்படம்….!

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வருபவர் நடிகர் முரளியின் மகன் அதர்வா.

தமிழ் திரையுலகில் பானா காத்தாடி திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது ப்ரியா பவானி ஷங்கருடன் குருதி ஆட்டம் திரைப்படத்தில் நடித்து வருகிறார் .

இந்நிலையில் நடிகர் அதர்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தம்பியுடன் எடுத்த சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்து, அவர் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அப்படியே அப்பா முரளி மாதிரி இருக்கிறார் சிறுவயதில் என அதர்வாவின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமன்ட்ஸ் அடித்து வருவதுடன், இந்த போட்டோ இணையத்திலும் வைரலாகி வருகிறது.