அதர்வாவின் ‘தள்ளிப் போகாதே’ ரிலீஸ் தேதி அறிவிப்பு….!

அதர்வாவின் அடுத்த படமான தள்ளிப் போகாதே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2021-ல் திரைக்கு வரவிருக்கிறது.

தெலுங்கில் வெளியாகி ஹிட்டான நின்னு கோரி படத்தின் தமிழ் ரீமேக் தள்ளிப் போகாதே படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். அதர்வாவிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். முக்கிய ரோலில் அமிதாஷ் பிரதான் நடித்துள்ளார். ஆடுகளம் நரேன், ஜெகன், காலி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர்.

அஜர்பைஜான் நாட்டில் ஜிசி என்ற சிகரத்தின் மீது 70 அடி உயரத்திற்கு மலையேற்றம் செய்து இந்த படத்தின் சில காட்சிகளை படமாக்கினார்களாம்.

மசாலா பிக்ஸ் மற்றும் எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஷண்முக சுந்தரம் காட்சிகள் அமைத்துள்ளார். கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ளார். கோபி சுந்தர் இசையமைக்கும் இந்த படத்திற்கு எடிட்டர் ஆர்கே செல்வா எடிட்டிங் செய்கிறார்.