இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கும் புதிய படத்தின் படபபிடிப்பு தொடங்கியது…!

இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கும் புதிய படத்தின் படபபிடிப்பு இன்று தொடங்கியது.

அதில் அதர்வா முரளி ஒரு இளமையான கதாபாத்திரத்தில் சித்தரிக்கும். பிஎச்டி மாணவராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் ஒப்பந்தமாகியுள்ளார் .

இந்த படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். கபிலன் வைரமுத்து வசனம் எழுதுகிறார். மேலும் முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது,

இது குறித்த முறையான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனத்திலிருந்து விரைவில் வெளியாகும் என தெரிகிறது . ஆர்.கண்ணன் எழுதி, இயக்குவதோடு எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தனது மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறார்.