அதர்வா முரளி முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் படம் 100 . போலீஸ் கண்ட்ரோல் ரூமின் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகும் முதல் படம் இது .

இப்படம் தமிழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களை எதிரொலிக்கும் விதமாக உருவாகியிருப்பதோடு, போலீஸ் கண்ட்ரோல் ரூம் பற்றி மக்கள் அறியாத பல விஷயங்களையும் அதன் பின்னணியையும் சொல்கிற படமாகவும் அமைந்துள்ளது என கூறப்பட்டது.

நேற்று இப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்றும் ரிலீஸ் ஆகாததால்  இது குறித்து சாம் ஆண்டன் தனது ட்விட்டரில், “100 திரைப்படம் குறித்து அற்புதமான விமர்சனங்களைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. நானும் எனது குழுவினரும் இந்தப் படத்திற்காக உடலையும் ஆன்மாவையும் ஒன்றாக செலுத்தி பணியாற்றியிருக்கிறோம்.. குறித்த நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய இயலவில்லையே என வேதனைப்படுகிறேன் மன்னிக்கவும். என பதிவிட்டிருக்கிறார்.

இப்படத்தை தயாரித்துள்ள எம்.ஜி.ஆரா சினிமாஸ் நிறுவனம், பலூன் படத்தின் வெளியீட்டு உரிமைக்காக தர வேண்டிய தொகையில் ஒரு கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதாகவும், அத்தொகையை தராமல் நூறு படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என, 70 எம் எம் எண்டர்டய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நூறு படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.